காலைத் தியானம் – அக்டோபர் 20, 2022

யோவான் 6: 27 – 40

வானத்திலிருந்து வந்த அப்பம்

                           நாம் உண்ணும் சரீரப் பிரகாரமான உணவு, வயிற்றுப் பசியை போக்கும். இயேசு, பரலோகத்திலிருந்து பிதாவினால் அனுப்பப்பட்ட அப்பம். இந்த அப்பம் நமது ஆத்தும பசியைப் போக்கும். வயிற்றுப் பசி இருந்தால் தான் உணவு உட்கொள்ள முடியும். அதேபோல ஆத்துமப் பசி இருந்தால்தான் பரலோகத்திலிருந்து வந்த அப்பத்தை உட்கொள்ள முடியும். பசியில்லாத நிலை வியாதியின் அறிகுறி. ஆத்துமப்பசி இல்லாவிட்டால் தேவனைத் துதித்துப் பாடு. அதிகாலை எழுந்தவுடன் துதிப் பாடல்கள் பாடு. ஆத்துமப் பசி தானாக வந்துவிடும். (சங்கீதம் 147:1)                

ஜெபம்:

ஆண்டவரே, அனுதினமும் அதிகாலையில் எழுந்திருக்கவும், உம்மைத் துதித்துப் பாடவும், உம்முடைய வேதத்தை தியானிக்கவும், உம்மோடு பேசவும் எனக்கு வேண்டிய பெலனைத் தாரும். சாத்தான் என்னைத் திசை திருப்ப கையாளும் தந்திரங்களை அழித்துப் போடும். ஆமென்.