யோவான் 6: 41 – 51
இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா?
ஆம், அவர் யோசேப்பின் குமாரன் தான். தச்சனுடைய வளர்ப்பு மகன்தான். மக்கள் இயேசுவை தச்சனுடைய மகன் என்பதால் அற்பமாக நினைத்தார்கள். ஆனால் தேவாதி தேவன் இந்த தச்சனுடைய குமாரன் மூலமாகத்தான் உலகத்தை இரட்சிக்க சித்தம் கொண்டார். உன் வாழ்க்கையிலும் கூட நீ அற்பமாய் எண்ணுகிறவர்கள் மூலம் தேவன் அற்புதங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார். படிப்பறிவு இல்லாதவர்கள் மூலமாகவும், சிறுவர்கள் மூலமாகவும் கூட தேவன் பல அற்புதங்களைச் செய்யலாம். தேவனுடைய திட்டம் நம்முடைய எதிர்பார்ப்புக்குள் இல்லை என்பதற்காக அதைக் கேள்வி கேட்க கூடாது. (1 கொரிந்தியர் 1:19-21)
ஜெபம்:
ஆண்டவரே, என் எதிர்பார்ப்புகளின் படி அல்ல, உமது திட்டத்தின்படியே என்னை வழி நடத்தும். ஆமென்.