காலைத் தியானம் – அக்டோபர் 22, 2022

யோவான் 6: 52 – 60

என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான்

                           மாம்சத்தைப் புசித்து, இரத்தத்தைப் பானம் பண்ணுவது என்றால் என்ன அர்த்தம்? இரண்டு நாட்களுக்கு முன் வாசித்த வேத பகுதியில், இயேசு  வானத்திலிருந்து (பரலோகத்திலிருந்து) வந்த அப்பம் என்று பார்த்தோம். இதன் பொருள் என்ன? இயேசுவை நாம் உட்கொள்ள வேண்டும். உட்கொள்வதென்றால், அவருடைய ஜீவன் நம்முடைய ஜீவனோடு கலந்து விட வேண்டும் என்று அர்த்தம். அவரோடு நாம் ஒன்றாக இணைக்கப்படவேண்டும் என்று அர்த்தம். இயேசு சுவிசேஷப் புத்தகங்களுக்குள் புதைந்து கிடப்பவர் அல்ல. அவர் உன் உள்ளத்தில் பிரவேசித்து அங்கு வசிக்க விரும்புகிறார். உன் உள்ளத்திற்குள் அவர் வந்துவிட்டால் அவரோடு இணைக்கப்பட்டுவிடுவாய். (யோவான் 15:5,6)         

ஜெபம்:

ஆண்டவரே, என் உள்ளத்திற்குள் வந்து என்னுடனேயே தங்கியிரும். அப்பொழுது நான் மிகுந்த கனிகளைக் கொடுப்பேன். ஆமென்.