காலைத் தியானம் – அக்டோபர் 23, 2022

யோவான் 6: 61 – 71

ஆண்டவரே யாரிடத்தில் போவோம்?      

                           கடினமான உபதேசம் என்று சொல்லி சிலர் இயேசுவை விட்டு விலகிக் கொண்டார்கள். இயேசு 12 சீஷர்களையும் பார்த்து நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களா என்று கேட்டார். ஆண்டவரிடம், ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்பதற்கே இடமில்லை. ஒன்று இயேசுவைப் பின்பற்ற வேண்டும் அல்லது அவரை விட்டு விலகிதான் இருக்க வேண்டும். பேதுரு நம் எல்லாருடைய சார்பிலும் ஆண்டவரே நாங்கள் யாரிடத்தில் போவோம் என்று சொல்லிவிட்டார். நித்திய ஜீவன் கொடுக்கக்கூடியவர் அவர் ஒருவரே. அவருடைய உபதேசம் கடினமானதாக இருந்தாலும், நீ எதிர்பார்க்கிறதை அவர் செய்யாவிட்டாலும், நீ கஷ்டத்தில் இருந்தாலும், குழப்பத்தில் இருந்தாலும், அவரை விட்டு விலகிப் போய் விடாதே. (உபாகமம் 6: 4,5)         

ஜெபம்:

ஆண்டவரே, நீர் மாத்திரமே நித்திய வாழ்விற்கான வழி என்பதை நான் அறிவேன். கடினமான உபதேசங்களின் மத்தியிலும் நான் உம்மைப் பற்றிக்கொள்ள கிருபை தாரும். ஆமென்.