காலைத் தியானம் – அக்டோபர் 25, 2022

யோவான் 7: 11 – 24

அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவன் எவனோ . . . அவன் அறிந்துகொள்ளுவான் 

                           இந்த நாட்களில் நாம் அநேக உபதேசங்களைக் கேட்கிறோம். அவற்றில் பல, குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. இந்த உபதேசம் தேவனால் கொடுக்கப்பட்டதா அல்லது பிரசங்கியார் சுயமாய் பேசுகிறாரா என்னும் கேள்வி அவ்வப்போது எழும்புகிறது. இயேசு கிறிஸ்துவின் அறிவுரையைக் கவனியுங்கள். முதலாவது தேவனுடைய சித்தத்தின்படி வாழ்க்கை என்னும் வண்டியை ஓட்டிக்கொண்டு போக வேண்டும். அப்பொழுது நாம் கேட்கும் உபதேசங்கள் எப்படிப்பட்டவை என்பதை அறிந்துகொள்வோம். தேவனால் உண்டாயிராத உபதேசங்களை அடையாளம் கண்டுகொண்டால் வண்டியை விலக்கி ஓட்டி விடலாம். சாலை ஓரமாக உட்கார்ந்து கொண்டு சாலையில் எதிர்கொள்ளக்கூடிய அபாயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆண்டவருடைய சித்தத்திற்கு உட்படாமல், வாழ்க்கை என்னும் வண்டியை ஓட்டினால் ஆபத்தில் தான் முடியும். முதலாவதாக அவருடைய சித்தத்தின் படி, அவர் சொல்லுகிற படி செய்ய கற்றுக் கொள்வோம். காலைத்தியான நேரத்தில் ஆண்டவர் உன்னோடு பேசுவதைக் கவனமாகக் கேள். (சங்கீதம் 95: 8)         

ஜெபம்:

ஆண்டவரே, என்னோடு பேசும். நான் கேட்டு, அதன்படி செயல்படுவேன். ஆமென்.