காலைத் தியானம் – அக்டோபர் 26, 2022

யோவான் 7: 25 – 34

நானே அவரை அறிந்திருக்கிறேன் 

                           இப்பூமியில் வாழும் நாட்களில்,பிதாவாகிய தேவனை ஒருவனும் கண்டதில்லை. காணவும் முடியாது. ஆனாலும் தம்மைத் தேடுகிறவர்கள் காணும்படியாகவும், தம்மோடு மனிதர்கள் ஒப்புரவாகும்படியாகவும் அவர் தமது குமாரனாகிய இயேசுவை இவ்வுலகத்திற்கு மனித உருவத்தில் அனுப்பினார்.  மனிதர்களுக்கு இயேசுவைத் தெரியும். ஆனாலும் இயேசுவை அறியவில்லை. இயேசு நாசரேத் ஊரைச் சேர்ந்தவர்; அவர் தச்சனுடைய (வளர்ப்பு) மகன் என்று தெரியும். ஆனால் அவர் தேவனுடைய குமாரன்; பிதாவினால் அனுப்பப்பட்டவர் என்பதை அறியவில்லை. நீ இயேசுவை அறிந்திருக்கிறாயா? இயேசுவைக் காண்கிறவன் பிதாவாகிய தேவனைக் காண்கிறான். இயேசுவோடு நெருங்கிய உறவு வைத்துக் கொள்கிறவன் பிதாவாகிய தேவனோடு நெருங்கிய உறவு வைத்துக் கொள்கிறான். இயேசு நானே வழி என்கிறார். (யோவான் 14: 6, 7)        

ஜெபம்:

ஆண்டவரே, நான் உம்மைக் காணவும், உம்மோடு நெருங்கிய உறவு வைத்துக் கொள்ளவும் வாஞ்சையாய் இருக்கிறேன். உலகம் என்னை உம்மிடமிருந்து பிரித்து விடாதபடி காத்துக் கொள்ளும். ஆமென்..