காலைத் தியானம் – அக்டோபர் 31, 2022

யோவான் 8: 23 – 32

பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால்    

                           திரியேக தேவனில் ஒருவரான இயேசு கிறிஸ்து சொல்வதைக் கவனியுங்கள். நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்கிறேன் (வசனம் 26). என் சுயமாய் ஒன்றும் செய்யவில்லை. என் பிதா போதித்தபடியே செய்கிறேன் (வசனம் 28). ஆகவே அவர் என்னைத் தனியே இருக்க விடவில்லை. நாமும் இப்படிச் சொல்ல முடியுமா? நம்முடைய ஆண்டவர் சொல்லிக் கொடுக்கிற படி மாத்திரம் செயல்பட்டால், நிச்சயமாக ஆண்டவர் நம்மைத் தனியே இருக்க விடமாட்டார். இதை எப்படி செயல்படுத்த முடியும் என்று நினைக்கிறாயா? முதலாவதாக, உன் ஆண்டவரோடு அனுதினமும் உறவாடி அவருடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொள். இரண்டாவதாக, உன்னுடைய ஒவ்வொரு செயலிலும் உன் சுய புத்தியையும், உலகப் பழக்க வழக்கத்தையும் பின்பற்றாமல், உன் ஆண்டவரின் ஆலோசனையைப் பின்பற்று. நீயும் தனியாயிருக்க மாட்டாய். (நீதிமொழிகள் 3: 5,6)                                             

ஜெபம்:

ஆண்டவரே, என்னை ஒருபோதும் தனியே விடாமல், என் சிந்தனை, பேச்சு, செயல் எல்லாவற்றையும் நீரே செவ்வைப்படுத்தும். ஆமென்.