காலைத் தியானம் – நவம்பர் 01, 2022

யோவான் 8: 33 – 41

பாவஞ்செய்கிற எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்  

                           பாவம் பயங்கரமானது. வெளிப்புறத்தில் அது இனிமையாகத் தோன்றும். கசப்பு மாத்திரையில் பூசப்பட்ட இனிப்பைப் போல, பாவத்தில் இனிப்பைக் காட்டி சாத்தான் மனிதனைப் பாவத்துக்கு அடிமையாக்கி விடுகிறான். கசப்பு மாத்திரைக்காவது சரீரத்தைக் குணமாக்கும் தன்மை இருக்கின்றது. பாவத்தின் கசப்புக்கு எந்தவித நன்மை கொடுக்கும் தன்மையும் கிடையாது. பாவத்தின் கசப்பிலிருந்து மீள முடியாத அளவுக்கு சாத்தான் நம்மை அடிமைப்படுத்தி விடுகிறான். மீள முடியாது என்று நம்மை நம்பவைத்துவிடுகிறான். ஆனால் மீள முடியும்! பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற வேண்டும் என்றால் இயேசுவுக்கு அடிமையாகி விடுவதுதான் ஒரே வழி. பாவத்துக்கு அடிமையாகும்படி நாம் சாத்தானால் தள்ளப்படுகிறோம். ஆனால் இயேசுவுக்கு அடிமையாகும்படி அவர் நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை. அது நம்முடைய சுயசித்தத்தின்படி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய காரியம். இயேசுவின் அன்பை ருசித்து அவரிடம் அன்பு செலுத்தாதவன் அவருக்கு அடிமையாக முடியாது. பவுல் தன்னை, கிறிஸ்துவின் அடிமை என்றுதான் அழைக்கிறார். (2 பேதுரு 2:19; 1 கொரிந்தியர் 7:22)                                            

ஜெபம்:

ஆண்டவரே, உம்மிடம் நான் வைத்திருக்கும் அன்பை வலுப்படுத்தும். சாத்தானிடம் “என்னை விட்டு விலகி ஓடு சாத்தானே” என்று சொல்லும் பெலனைத் தாரும். ஆமென்.