காலைத் தியானம் – நவம்பர் 02, 2022

யோவான் 8: 42 – 48

தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவி கொடுக்கிறான்  

                           நாம் எல்லாரும் தேவனால், அவருடைய சாயலில் உண்டாக்கப்பட்டவர்கள் தானே! அப்படியானால், பிசாசினால் உண்டானவன், தேவனால் உண்டானவன் என்று இன்று வாசித்த வேத பகுதியில் சொல்லப்பட்டிருப்பதின் பொருள் என்ன? பிசாசினால் உண்டானவன் என்றால் பிசாசுக்குச் சொந்தமானவன் என்றும், தேவனால் உண்டானவன் என்றால் தேவனுக்குச் சொந்தமானவன் என்றும் அர்த்தம். He who belongs to God என்று ஆங்கில (NIV) வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மனிதன் பேசுவதைக் கேட்க காது சரியாக இருக்கவேண்டும். தேவன் பேசுவதைக் கேட்க உள்ளம் தூய்மையாக இருக்கவேண்டும். நாம் தேவனுக்கு சொந்தமானவர்களாக இருக்க வேண்டும். மேய்ப்பனுடைய சொந்த ஆடுகள் மாத்திரமே அவன் சத்தத்தை அறியும். (யோவான் 10: 3, 4)                                           

ஜெபம்:

ஆண்டவரே, நான் என்றும் உம்முடையவனாக இருக்கவும் உம்முடைய சத்தத்தைக் கேட்கவும் எனக்குக் கிருபை தாரும். ஆமென்.