காலைத் தியானம் – நவம்பர் 06, 2022

யோவான் 9: 24 – 33

இது ஒன்றுதான் எனக்குத் தெரியும்        

                           தெரிய வேண்டியதும் ஒன்றுதான். குருடனாய் இருந்தேன், இப்பொழுது காண்கிறேன். காணாமல் போயிருந்தேன், இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுவிட்டேன். பாவியாயிருந்தேன், இப்பொழுது சுத்தமாக்கப்பட்டு இரட்சிக்கப்பட்டுவிட்டேன். கிறிஸ்துவைப் பற்றிய வேதாந்தங்களையும் தத்துவங்களையும் விட எளிமையான விசுவாசம் மிக மிக உயர்ந்தது. உன் விசுவாசத்தையும், இயேசு கிறிஸ்துவால் நீ மன்னிக்கப்பட்டு, கழுவப்பட்டு பரலோகத்துக்குத் தகுதியானதையும் உன் நண்பர்களிடம் எப்போதாவது பகிர்ந்து கொண்டதுண்டா? (மாற்கு 5:19)                                        

ஜெபம்:

ஆண்டவரே, என் நண்பர்களின் நித்திய வாழ்வைக் குறித்த கரிசனையை எனக்குத் தாரும். ஆமென்.