காலைத் தியானம் – நவம்பர் 07, 2022

யோவான் 9: 34 – 41

அவனைப் புறம்பே தள்ளி விட்டார்கள் . . . இயேசு அவனைக் கண்டபோது . . .        

                           சபைத் தலைவர்கள் பிறவி குருடனாயிருந்தவனை சபைக்கு வெளியே தள்ளி விட்டார்கள். அவன் செய்த குற்றம் என்ன? அவன் இயேசுவுக்கும், அவர் வல்லமைக்கும், அவர் பிதாவாகிய தேவனிடத்திலிருந்து வந்தார் என்பதற்கும் சாட்சி கூறினான்.  அதுதான் அவன் செய்த குற்றம்! மனிதரால் தள்ளப்பட்டான். ஆனால் இயேசுவோ அவனைத் தேடி கண்டுபிடித்து, சேர்த்துக் கொண்டார். அது மாத்திரமல்ல, தான் தேவனுடைய குமாரன் என்பதையும் அவர் அவனுக்கு வெளிப்படுத்தினார். நாமும் இயேசுவின் சாட்சிகளாயிருப்பதால் மனிதரால் தள்ளப்படலாம்; அல்லது வேறு விதமாக துன்பப்படுத்தப்படலாம். ஆனால் நம்மை அரவணைக்க நம்முடைய ஆண்டவர் காத்துக் கொண்டிருக்கிறார்.                                      

ஜெபம்:

ஆண்டவரே, உமக்கு சாட்சியாக வாழ எனக்கு பெலன் தாரும். ஆமென்.