காலைத் தியானம் – நவம்பர் 09, 2022

யோவான் 10: 11 – 21

ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்       

                           சம்பளத்திற்கு வேலை செய்யும் வேலையாள், அபாயம் வரும்போது ஓடி விடுவானாம். ஏனென்றால் ஆடுகள் மீது அவனுக்கு அன்பு இல்லை. அவனை உந்தித் தள்ளுவது பணம் தான். ஆடுகளுக்குச் சொந்தக்காரன் ஆடுகளை மேய்க்கும் போது, துணிச்சலுடன் அபாயங்களை எதிர்கொள்ளுகிறான். ஆனால் அவன் கூட அபாயங்களிலிருந்து மீண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தான் செயல்படுகிறான். நல்ல மேய்ப்பராகிய நம் ஆண்டவரோ, ஆடுகளுக்காகத்  தம் ஜீவனையே கொடுத்துவிட்டார். தம்முடைய ஜீவனைக் கொடுத்து, பரலோக பாக்கியத்தை உனக்குப் பெற்றுத் தந்த உன் ஆண்டவருக்கு நீ செய்வது என்ன? அவர் கிருபையாய் கொடுத்துள்ள உன் நேரத்தில் எவ்வளவு நேரத்தை அவருக்கென்று கொடுக்கிறாய்? உனக்கு அவர் கொடுத்துள்ள பணத்தில் எவ்வளவை அவருக்குக் கொடுக்கிறாய்? அவருக்காக உழைக்கும் தருணங்கள் வந்தபோது, அவைகளைத் தட்டிக் கழித்தது உண்டா?                                    

ஜெபம்:

ஆண்டவரே, எனக்கு பதிலாக உம்மையே பலியாகக் கொடுத்து, என்னை மீட்டுக் கொண்டீர். என் நேரத்தையும், பணத்தையும் உமக்காக உபயோகிப்பதில் தயக்கம் காட்டாமலிருக்க எனக்கு பெலன் தாரும். ஆமென்.