காலைத் தியானம் – நவம்பர் 10, 2022

யோவான் 10: 22 – 33

அவைகளை ஒருவனும் என் கையிலிருந்து பறித்துக் கொள்வதில்லை       

                           பாதுகாப்புக்கு உறுதி கொடுக்கப்படுகிறது. ஆடுகள் எவ்வளவு பெலன் பெற்றிருந்தாலும் பாதுகாப்பு நிச்சயம் இல்லை. அவைகளுடைய சொந்த பெலத்தினால், சிங்கம் போன்ற மிருகங்களை எதிர்த்து நிற்க முடியாது. மேய்ப்பனின் பெலன் தான் ஆடுகளுக்கு பாதுகாப்பு. நம்முடைய ஆண்டவர் சர்வ வல்லமையுள்ளவர். எதிரியாகிய சாத்தானை விட கணக்கிட முடியாத அளவிற்கு அதிக வல்லமையுடையவர். அவருடைய சத்தத்தைக் கேட்டு அவர் பின்னாலே செல்கிற அவருடைய ஆடுகளை ஒருவனும் அவர் கையிலிருந்து பறித்துக் கொள்ள முடியாது. இயேசுவின் கையிலிருக்கிற ஆடுகளுக்கு நிச்சயம் பாதுகாப்பு உண்டு. (சங்கீதம் 17: 7-9; 91: 3- 6)                                    

ஜெபம்:

ஆண்டவரே, நீர் என்னைப் பிடித்த பிடியை விட்டு விடாதேயும். உமது செட்டைகளின் கீழ் அடைக்கலம் தாரும். ஆமென்.