காலைத் தியானம் – நவம்பர் 11, 2022

யோவான் 10: 34 – 42

என் பிதாவின் கிரியைகள்        

                           இயேசு, தம்முடைய பிதாவின் கிரியைகளைச் செய்தார். நாம் கர்த்தருடைய ஜெபத்தை சொல்லும்போதெல்லாம், “பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே” என்று தானே ஆரம்பிக்கிறோம். பரலோகத்தில் இருக்கிற ஆண்டவர், நம் பிதா என்பது உண்மையானால் நாமும் அந்த பிதாவின் கிரியைகளைச் செய்ய வேண்டுமே! பிதாவின் கிரியைகளைச் செய்யாவிட்டால், பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே என்று ஆரம்பிக்கும் கர்த்தருடைய ஜெபத்தை சொல்லக்கூட நமக்கு உரிமை இல்லையே! நாம் செய்ய வேண்டிய பிதாவின் கிரியைகள் எவை என்று யோசித்துப் பார்ப்போம். ஆண்டவர் நம்மோடு பேசுவார். (மத்தேயு 7:21)                                          

ஜெபம்:

ஆண்டவரே, நீர் விரும்புவதை மாத்திரம் நான் எப்போதும் செய்ய என்னைப் பக்குவப்படுத்தியருளும். ஆமென்.