காலைத் தியானம் – நவம்பர் 12, 2022

யோவான் 11: 1 – 10

பின்னும் இரண்டு நாள் தங்கினார்        

                           தாம் மிகவும் நேசித்த லாசரு வியாதியாயிருந்தான் என்பது இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். தெரிந்திருந்தும் அவர் இருந்த இடத்திலேயே மேலும் இரண்டு நாட்கள் தங்கிவிட்டார். ஏன் இந்த தாமதம்? திருமண வீட்டில் திராட்சை ரசம் காலியாகிவிட்டதை இயேசுவிடம் சொன்னபோது, ”என் வேளை இன்னும் வரவில்லை” என்றுதான் சொன்னார். ஏன் இந்த தாமதம்? காரணம் நமக்குத் தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. தாமதத்தைக் கண்டு மனம் சோர்ந்து போகும் வேளையில், நம்முடைய ஆண்டவருக்குத் தெரியாமல் நம் தலையிலுள்ள ஒரு முடி கூட கீழே விழாது என்பதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். அவருடைய வேளைக்காகக் காத்திருக்கும் பொறுமையை ஆண்டவர் தாமே நமக்குத் தருவாராக.                                         

ஜெபம்:

ஆண்டவரே, உமது வேளைக்காகக் காத்திருக்கும் விசுவாசத்தையும் பொறுமையையும் எனக்குத் தாரும். ஆமென்.