காலைத் தியானம் – நவம்பர் 16, 2022

யோவான் 11: 47 – 57

ரோமர் வந்து அழித்துப் போடுவார்களே!       

                           ரோமர், யூதர்கள் உட்பட பல நாட்டினரை ஜெயித்து அவர்களை ஆண்டுவந்த போதிலும், யூதர்களுக்கு அந்த ஆட்சியில் கொஞ்சம் பங்கு கொடுத்திருந்தார்கள். அந்தப் பங்கு சதுசேயர்கள் கையில் இருந்தது. திரளான ஜனங்கள் இயேசுவின் பின்சென்றால், அந்த திரள்கூட்டத்தை வைத்துக்கொண்டு ரோமருக்கு விரோதமாய் இயேசு கலகம் பண்ணக்கூடும் என்று சதுசேயர்கள் நினைத்தார்கள். அப்படி கலகம் பண்ணினால், ரோமர் வந்து கலகத்தை அடக்கி, யூதர்களுக்கு அவர்கள் தயவாகக் கொடுத்திருந்த ஆட்சிப் பொறுப்பையும் பிடுங்கி விடுவார்களே என்று சதுசேயர்கள் பயந்தார்கள். அதிகாரம் போய்விடும் என்பதுதான் அவர்கள் பயம். அதிகாரமா அல்லது இயேசுவா? இந்த இரண்டில் அவர்கள் தெரிந்து கொண்டது அதிகாரம்.  நீ தெரிந்து கொள்வது எது? (மத்தேயு 27: 22)                

ஜெபம்:

ஆண்டவரே, நீர் மாத்திரம் தான் எனக்கு முக்கியம். பணமும் பதவியும் இவ்வுலகத்தின் வசதிகளும் என்னை உம்மிடமிருந்து பிரித்து விடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.