காலைத் தியானம் – நவம்பர் 20, 2022

யோவான் 12: 34 – 41

இன்னும் கொஞ்சக் காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்      

                           நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஆயத்த நாட்களைப் பிரயோஜனப் படுத்திக் கொள்ளவேண்டும். இயேசு கிறிஸ்து நம்மோடு பேசி நம்மை உற்சாகப்படுத்தும் காலம் உண்டு. உள்ளத்தில் ஒளி வீசும் காலம் உண்டு. இந்தக் காலங்களைத் தவற விட்டுவிடக்கூடாது. ஆவியானவர் உன்னோடு பேசி ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்யத் தூண்டுவாரானால், அதைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி வைக்கவேண்டாம். பின்னால் அந்த சந்தர்ப்பம் கிடைக்காமலேயே போய்விடும். நாளை என்பது நம் கையில் இல்லை. (பிரசங்கி 12:1, 7)                    

ஜெபம்:

ஆண்டவரே, காலத்தை வீணாக்காமல் உமக்காக வாழ எனக்குக் கிருபை தாரும். ஆமென்.