காலைத் தியானம் – நவம்பர் 22, 2022

யோவான் 13: 1 – 11

கால்களை மாத்திரம் கழுவ வேண்டியதாயிருக்கும்      

                           நாம் பொதுவாக சுத்தமானவர்களாக இருக்கலாம். இருந்தாலும் கால்களைக் கழுவ வேண்டியவர்களாக இருக்கிறோம். வீட்டை விட்டு வெளியே போய் திரும்பும் நாம், கை கால் முகம் ஆகியவற்றை கழுவாமல் சாப்பிட உட்காருவதில்லை. படுக்கைக்குப் போவதுமில்லை. ஒவ்வொரு நாளும் நாம் எத்தனையோ பேரைப் பார்க்கிறோம். எத்தனையோ வித்தியாசமான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறோம். பொறாமை, கோபம், பெருமை போன்ற பலவிதமான அழுக்குகள் நம்முடைய சுத்தமான (இயேசு கிறிஸ்துவால் சுத்தப்படுத்தப்பட்ட) ஆத்துமாவில் ஒட்டிக் கொள்கின்றன. அவற்றைப் படுக்கைக்குப் போகும் முன் கழுவி விடவேண்டும். கழுவாமல் அழுக்குடன் படுத்துக்கொள்ளவேண்டாம். (ஏசாயா 1:16)                         

ஜெபம்:

ஆண்டவரே, அனுதினமும் என்னைக் கழுவியருளும். மறுபடியும் புழுதி நிறைந்த இடங்களுக்குச் செல்லாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.