காலைத் தியானம் – நவம்பர் 23, 2022

யோவான் 13: 12 – 20

ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்      

                           வேலை செய்கிறவன் தன் எஜமானுடைய கால்களைக் கழுவுவது வழக்கமாயிருந்தது. வேலை வாங்குகிறவன் உயர்ந்தவன், வேலை செய்கிறவன் தாழ்ந்தவன் என்பது உலக நியதி. தேவனுடைய ராஜ்யத்தில் அப்படியல்ல. தாழ்மையான மனப்பான்மை உள்ளவன் தான் அந்த ராஜ்யத்தின் குடிமகனாக இருக்க முடியும். தாழ்மை, கர்த்தர் விரும்புகிற குணம். தாழ்மை, இயேசு கிறிஸ்து வாழ்ந்து காட்டிய வாழ்க்கை முறை. ஆகையால் நாமும் தாழ்மையைக் கற்றுக்கொள்ளவேண்டும்.  ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவவேண்டும். நம்மை விட ஏழ்மையான நிலையில் இருப்பவர்களை மரியாதையுடனும் அன்புடனும் நடத்த வேண்டும். நம்மை நாமே சோதித்துப் பார்ப்போம். (லூக்கா 22: 26)                         

ஜெபம்:

ஆண்டவரே, தாழ்மையான மனதை எனக்குத் தாரும். உம்முடைய ராஜ்யத்துக்கு என்னைத் தகுதி உள்ளவனா(ளா)க்கியருளும். ஆமென்.