காலைத் தியானம் – நவம்பர் 24, 2022

யோவான் 13: 21 – 30

உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்      

                           மூன்றரை வருடங்கள் இயேசுவோடு இருந்தவன். அவரோடு பழகியவன். அவர் போதனைகளைக் கேட்டவன். அவரோடு சாப்பிட்டவன். எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவோடு ஊழியத்தில் பங்குபெற்றவன்.  அப்படிப்பட்டவன் இயேசுவைக் காட்டிக் கொடுக்கிறான். நமக்கு இது ஒரு எச்சரிக்கை. நான் அவருடைய வசனத்தை அனுதினமும் வாசிக்கிறவன் தான். இயேசுவைப் பற்றி பிரசங்கங்கள் ஏராளமாய் கேட்கிறவன் தான். அவரோடு அப்பம் புசிக்கிறவன் தான். அவர் புகழ் பாடுகிறவன் தான். அவரை நானும் காட்டிக் கொடுத்திருக்கிறேனோ?  (யூதா 24, 25)                        

ஜெபம்:

ஆண்டவரே, கடைசி வரை நான் விழுந்து விடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.