காலைத் தியானம் – நவம்பர் 26, 2022

யோவான் 14: 1 – 14

நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்      

                           இயேசு கிறிஸ்துவின் பூலோக வாழ்க்கை முடிவடையப் போகிறது. தம்மை நம்பியிருந்தவர்களை விட்டுவிட்டு போகவேண்டிய காலம் வந்துவிட்டது. அவர்களோடு இயேசு கடைசி முறையாகப் பேசுகிறார். கலங்காதேயுங்கள், நான் திரும்பவும் வருவேன்; வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் என்ற ஆறுதலான வார்த்தைகளே அவருடைய கடைசி பேச்சு. பெரிய வெள்ளிக்கிழமை அன்று நாம் நினைவுகூருகிறபடி நமக்காக மரித்த அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். இன்றும் உயிரோடிருக்கிறார். சதா காலங்களிலும் நம்மோடிருக்கிறார். (எபிரேயர் 13: 5, 6)                       

ஜெபம்:

ஆண்டவரே, என்றென்றும் எனக்கு சகாயராக நீர் என்னோடிருப்பதற்காக நன்றி சுவாமி. ஆமென்.