காலைத் தியானம் – ஜனவரி 24, 2023

நீதி 24: 1 – 34   

ஞானத்தை சம்பூரணமாய் கொடுக்கிறவர்                

                           ஞானத்தை அறிந்துகொள்வது நல்லது. அது கூட்டில் இருந்து ஒழுகும் தேன்போன்றது. கர்த்தர் ஞானத்தைத் தருகிறார். அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும் என்று பரிசுத்த வேதாகமம் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. இன்று நீங்கள் படித்துக் கொண்டு இருக்கலாம்; அல்லது ஒரு நிறுவனத்தில் வேலை செய்யலாம்; அல்லது கர்த்தருடைய ஊழியத்தில் ஈடுப்பட்டிருக்கலாம்; அல்லது ஒரு தொழில் செய்துகொண்டிருக்கலாம்; அல்லது உங்கள் குடும்பத்தை நிர்வகிக்கலாம். நாம் என்ன செய்தாலும் தேவன் தரும் ஞானம் நமக்குஅவசியம். ஒருவன் ஞானத்தில் குறையுள்ளவனாய் இருந்தால் அவன் தேவனிடத்தில் கேட்கக்கடவன் என்றும், அவர் கேட்கிற யாவருக்கும் சம்பூரணமாய் கொடுக்கிறவரும், ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாய் இருக்கிறார் என்றும் வேதாகமம் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. இது நமக்கு எவ்வளவு பெரிய பாக்கியம்! ஞானத்தைக் கர்த்தரிடத்தில் கேட்டு பெற்றுக்கொண்டு ஞானமாய் நம் காரியங்களை நடத்துவிப்போமாக. அப்பொழுது மேலான ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக்கொள்வோம்.     

ஜெபம்:

என் அன்பு தகப்பனே, பரத்திலிருந்து வரும் ஞானத்தினால் என்னை நீர் நிரப்பும். ஆமென்.