காலைத் தியானம் – ஜனவரி 25, 2023

நீதி 25: 1 – 28   

நீடிய பொறுமை                

                           நீடிய பொறுமை ஆவியின் கனிகளில் ஓன்று. ஆவியானவர் நம்மில் தொடர்ந்து செயல்படும்பொழுது, நாம் ஆவியானவருக்கு இணங்கி நடக்கும்பொழுது, நம்மில் உருவாகிற குணாதிசயங்கள்தான் ஆவியின் கனிகள். இன்று நாம் அவசர உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் பொறுமை என்பது அரிதான ஒன்றாய் இருக்கிறது. ஆனால், நீண்ட பொறுமையினால்அநேகக் காரியங்களை நாம் சாதிக்க முடியும். பிறரையும் நாம் நம்முடைய நீண்டபொறுமையினால் மனம் சம்மதிக்கச் செய்ய முடியும். அவசரப்பட்டோ, பதட்டப்பட்டோ, எந்த காரியாதையும் நாம் செய்துவிடாமல் பொறுமையோடு, நீடிய பொறுமையோடு வாழ்வை, வாழ்வின் காரியங்களை அணுக ஆவியானவர் நமக்கு உதவிசெய்யும்படி அவரிடத்தில் நாம் கேட்போமாக. இனிமையான சொற்களை பேசும் நாவையும் கர்த்தர் தாமே நமக்குத் தருவாராக.      

ஜெபம்:

என் அன்பு தகப்பனே, எந்த காரியத்தையும் பொறுமையோடு கையாள எனக்கு நீர் உதவிசெய்யும். இனிமையான சொற்களை நான் பேச எனக்குப் போதியும். உம்முடைய செயலாற்றலால் நான் நீடிய பொறுமை என்னும் ஆவியின் கனியை என்னுள் பெற்றுக்கொள்ள எனக்கு உதவிசெய்யும். ஆமென்.