காலைத் தியானம் – ஜனவரி 26, 2023

நீதி 26: 1 – 28   

கோள் சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்                

                           அநேக நேரம் எளிதாக முடிந்து போகவேண்டிய ஒரு பிரச்சனையை இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயுமாகக் கோள்சொல்லி பெரிதாக்கி விடுகிறோம். இப்படிப் பட்ட கோள் சொல்கிறவர்கள் இல்லை என்றால் சண்டை அடங்கும் என்று வேதாகமம் சொல்கிறது. நமக்குத் தேவையில்லாத காரியங்களில் எப்பொழுதுமே நாம் தலையிட வேண்டாம். இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயுமாகச் சொல்லி பிரச்சனைகளைச் சூடேற்றாமல் ஞானமாய் பேச, சமாதானத்துக்கேற்ற வார்த்தைகளைப் பேச கர்த்தரிடத்தில் உதவி கேட்போமாக. அவசியமில்லாத, மற்றவரைப் பற்றிய காரியங்களை நாம் எப்பொழுதுமே பேச வேண்டாம்.  எப்பொழுதும் தயை நிறைந்த வார்த்தைகளும், ஞானம் நிறைந்த வார்த்தைகளும், சமாதானம் உருவாக்கும் வார்த்தைகளுமே நம் வாயிலிருந்து புறப்பட வேண்டும் என்று அனுதினமும் கர்த்தரிடத்தில் கேட்போம். அப்பொழுது நாம் கர்த்தரின் வாயாக இருந்து செயல்பட கர்த்தர் நமக்கு அனுக்கிரகம் செய்வார்.       

ஜெபம்:

என் அன்பு தகப்பனே, கோள் சொல்லாமல், எனக்குத் தேவையில்லாத காரியங்களில் தலையிடாமல் எப்பொழுதும் உம்முடைய வாயாக இருந்து என் குடும்பத்திலும் சமுதாயத்திலும் செயல்பட எனக்கு உதவிசெய்யும். ஆமென்.