அப் 15: 12 – 22
யாக்கோபு அவர்களை நோக்கி
நியாயப்பிரமாணத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து வாக்குவாதம் நடந்து கொண்டேயிருந்தது. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தோடு திருச்சபையின் முதல் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது. இயேசுவின் சகோதரரான யாக்கோபுதான் ஆலோசனைக் கூட்டத்தின் தலைவர். அவர் நீதிமான் (James the Just) என்று கண்ணியமாக அழைக்கப்பட்டவர். நியாயப்பிரமாணத்தை மிகவும் கண்டிப்புடன் கைக்கொண்டு வந்தவர். நியாயப்பிரமாணம் முழுவதையும் யூதரல்லாதவர்களும் கைக்கொள்ளவேண்டும் என்று சொல்லுகிற கூட்டத்தில் அவர் சேர்ந்துவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்திருக்கலாம். நியாயப்பிரமாணத்தில் யூதர்களின் (இஸ்ரவேலரின்) குடியிருப்புச் சட்டங்களும், வழிபாட்டுச் சட்டங்களும் உண்டு. அவற்றை எப்படி யூதர்களல்லாதவர்களும் பின்பற்ற வேண்டும் என்று சொல்லமுடியும்? யாக்கோபு ஜெபத்துடன் செயல்பட்டார். சரியான முடிவு எடுக்கும் ஞானம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. யாக்கோபைப் போன்ற தலைவர்கள் இன்றும் நம் திருச்சபைக்குத் தேவை.
ஜெபம்:
ஆண்டவரே, நடுநிலையைக் கைக்கொண்டு, எல்லாருடைய கருத்துக்களையும் கவனமாகக் கேட்டு, நீர் மாத்திரம் கொடுக்கக்கூடிய ஞானத்தோடு முடிவெடுக்கும் தலைவர்களை எங்களுக்குத் தாரும். ஆமென்.