காலைத் தியானம் – மார்ச் 18, 2023

அப் 15: 23 – 29   

விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும் விலகியிருக்கவேண்டும்  

                           இது யூதர்களுக்கு மாத்திரம் கொடுக்கப்பட்ட கற்பனையல்ல. கர்த்தருடைய அறநெறி சட்டங்கள் (Moral Law – குறிப்பாகப் பத்து கற்பனைகள்) உலக மக்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டவை. இவற்றை நாம் நம் விருப்பம் போல கலாச்சாரம் என்ற பெயரில் மாற்றிக் கொள்ளமுடியாது. புறஜாதியார் மீது சுமத்தப்பட்ட தேவையில்லாத நியாயப்பிரமாணங்களின் சுமையை இறக்கி வைக்கவேண்டும் என்பது யாக்கோபின் விருப்பம். ஆனால் தேவனுடைய அறநெறி சட்டங்களையும், கற்பனைகளையும் விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே அவரிடம் இடமில்லை. யாக்கோபு எடுத்த முடிவு, பரிசுத்த ஆவியானவருக்கும் நலமாகப்பட்டதாம். நாம் எடுக்கும் முடிவுகளும் தீர்மானங்களும் மனிதரை திருப்தி படுத்துவதற்காக எடுக்கப்படாமல் பரிசுத்த ஆவியானவரின் உடன்பாட்டோடு எடுக்கப்பட வேண்டும்.                    

ஜெபம்:

ஆண்டவரே, மனிதரைத் திருப்திபடுத்தும் மனப்பான்மை என்னை உமது சித்தத்திலிருந்து விலக்கிக் கொண்டு போய்விடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.