காலைத் தியானம் – மார்ச் 19, 2023

அப் 15: 30 – 41

அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள்   

                           மாற்குவைக் குறித்து பவுலுக்கும் பர்னபாவுக்கும் ஒரு கருத்து வேறுபாடு உண்டாயிற்று. அந்த வேறுபாடு மனஸ்தாபமாக மாறி அவர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. கோபம் பிரிவினையை உண்டாக்கிவிட்டது. இது நாம் வருத்தப்பட வேண்டிய விஷயம். கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள், அவரைச் சுமந்து செல்லும் சீஷர்கள் சண்டை போடலாமா? சண்டை போட்டுக் கொண்டார்கள். ஆனால் திரும்பவும் சேர்ந்துக் கொண்டார்கள். தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் மாற்குவை அழைத்துக் கொண்டு வா, அவன் ஊழியத்தில் எனக்குப் பிரயோஜனமானவன் என்று எழுதுகிறார். கருத்து வேறுபாடுகள் சபையில் பிரிவினைகளை ஏற்படுத்திவிடாமல் கவனமாய் இருங்கள். (2 தீமோத்தேயு 4:11)                    

ஜெபம்:

ஆண்டவரே, என்னையே அழிக்கக்கூடிய கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய ஞானத்தையும் பெலனையும் எனக்குத் தாரும். ஆமென்.