காலைத் தியானம் – மார்ச் 20, 2023

அப் 16: 1 – 12

பரிசுத்த ஆவியினாலே தடை பண்ணப்பட்டு   

                           ஆசியாவில் வசனத்தைச் சொல்லவேண்டும் என்பது பவுலின் ஆசை. அது நல்லதுதானே! அந்த ஆசையில் தவறு எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனாலும் பரிசுத்த ஆவியானவர் அதைத் தடை பண்ணினார். மக்கெதோனியா தேசத்திலுள்ள பிலிப்பி பட்டணத்திற்குப் பவுல் போகவேண்டும் என்பது தேவனுடைய சித்தம். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில்கூட பரிசுத்த ஆவியானவர் சில சமயங்களில் நமது திட்டங்களைத் தடை பண்ணுவது உண்டு. அப்படிப்பட்ட  நேரங்களில் மலைக்க வேண்டாம். முழங்காற்படியிட்டு ஆண்டவரே, உம்முடைய திட்டத்தை எனக்குக் காண்பியும் என்று ஜெபம்பண்ணு. அவர் சித்தத்தின்படி செயல்படு. (அப்போஸ்தலர் 21: 14, ஏசாயா 55: 8)                    

ஜெபம்:

ஆண்டவரே, என் காரியங்கள் அனைத்தையும் உமது கண்கள் கவனித்துக் கொண்டிருப்பதை உணர்ந்துகொள்ளும் ஞானத்தை எனக்குத் தாரும். ஆமென்.