காலைத் தியானம் – செப்டம்பர் 18, 2023

2 கொரி 2:12-17

கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்

                    இயேசு கிறிஸ்து காட்டும் வழியில் நாம் நடக்கும் போது எல்லா மனிதர்களுக்கும் நம்முடைய செயல்பாடுகள் புரியாது. அவர்கள் ஆமோதிக்க மாட்டார்கள். ஒரு சிலருக்கு நம் செயல்களும், சொற்களும் நறுமணமாகத் தோன்றும். இன்னும் சிலருக்கு அதே செயல்களும் சொற்களும் துர்நாற்றமாகத் தோன்றும். நம் சக மனிதர்களின் விருப்பு வெறுப்புக்கு ஒத்தவாறு நம் செயல்களை மாற்றி அமைக்கக் கூடாது. இயேசு என்ற ஒரே ஒருவர் ஆமோதிக்கும் வண்ணம் நம் சொற்களையும் செயல்களையும் அமைக்க வேண்டும். 

ஜெபம்:

என்னை நேசிக்கிற பிதாவே, பிற மக்களின் மகிழ்ச்சிக்காக நான் வாழ்ந்தது போதும். உம்முடைய மகிழ்ச்சிக்காகவே வாழ விரும்புகிறேன். இவ்வாறு என் வாழ்க்கையை அமைக்க உம் ஆவியினால் என்னைப் பெலப்படுத்தும்.   ஆமென்.