2 கொரி 3:1-3
கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்
Inland letters உங்களில் பலருக்குத் தெரியும். பல இளைஞர்களுக்குத் தெரியாமல்கூட இருக்கலாம். கடிதம் எழுதும் பழக்கம் படிப்படியாக மறைந்து விட்ட இந்த நாட்களில், எனக்குப் பொக்கிஷமாக இருப்பது என் பாட்டி எனக்கு சிறு வயதில் inland letterல் எழுதிய அன்பு வார்த்தைகளே. அக்கடிதங்கள் என் பாட்டி என் மீது எவ்வளவு அன்பாய் இருந்தார்கள் என்ற உண்மையை இன்றும் தெரிவிக்கின்றன. தூய ஆவியினாவர் தம் அன்பின் செயல்களையும், வார்த்தைகளையும் நம் இதயங்களில் எழுதியிருக்கிறார். நாமே தேவனுடைய கடிதங்கள். நம் நடத்தையின் மூலம் தேவன் நம் மீது எவ்வளவாய் அன்பு வைத்திருக்கிறார் என்ற அக்கடிதத்தின் செய்தியைப் பிறருக்கு வெளிப்படுத்த அழைக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய வாழ்க்கையும், செயல்களும், வார்த்தைகளும், தேவனுடைய அன்பை வெளிப்படுத்தும் கடிதங்களாக இருக்கட்டும்.
ஜெபம்:
என்னை நேசிக்கிற நல்ல பிதாவே, நீர் உம் ஆவியினால் எழுதிய கடிதம் நான் என்பதை உணருகிறேன். அதனை எழுத நீர் கொடுத்த வெகுமதி, உம் ஒரே பேறான குமாரனின் ஜீவன். அதற்காக நன்றி. நீர் இவ்வளவாய் என்மீது கொண்டுள்ள அன்பின் செய்தியைப் பிரதிபலிக்கும்படி என்னை அர்ப்பணிக்கிறேன். ஆமென்.