காலைத் தியானம் – நவம்பர் 20, 2023

கலா 3:10-18

வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்க மாட்டாதே      

                    ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். அவனுக்கு தேவ தயவு கிடைத்தது. ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் செய்த ஆண்டவர் அவன் நியாயப்பிரமாணங்களின்படி நடந்தானா என்று பார்க்கவில்லை. நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுவதற்கு முதலாவது ஆபிரகாமின் நாட்களில் நியாயப்பிரமாணம் இருக்கவில்லை. ஆபிரகாமின் பேரனான யாக்கோபிடம் கர்த்தர் தான் ஆபிரகாமோடு செய்திருந்த உடன்படிக்கையை உறுதிப்படுத்தியதற்கு 430 வருடங்களுக்குப் பின்தான், நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது.  கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை நியாயப்பிரமாணம் அர்த்தமற்றவைகளாக்க முடியாது. வாக்குத்தத்தங்களின் தேவனை விசுவாசிப்போம். அவருடைய தயவு கிடைக்கும்.     

ஜெபம்:

ஆண்டவரே, என் செயல்களில் அநேகக் குறைகள் உண்டு. உம்மையே விசுவாசிக்கிறேன். என்மீது கிருபையாயிரும். ஆமென்.