கலா 3:26-29
கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்களே
அழுக்கு படிந்த, கிழிந்த ஆடைகளை ஒருவன் அணிந்திருந்தால் அவனைப் பற்றி எப்படிப்பட்ட எண்ணங்கள் நம் மனதில் தோன்றும் என்று கற்பனை பண்ணிப்பாருங்கள். சுத்தமான, நேர்த்தியான உடைகளை அணிந்திருப்பவன் நம் மனதில் எப்படிப்பட்ட எண்ணங்களை உண்டாக்குகிறான் என்பதையும் யோசித்துப் பாருங்கள். நாம் கிறிஸ்துவை அணிந்து கொண்டால், மற்றவர்கள் கிறிஸ்துவை நம்மில் காண வேண்டுமே! கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டவன் கிறிஸ்துவைப் போல பேச வேண்டும். கிறிஸ்துவைப் போல நடக்க வேண்டும். அனுதினமும் காலையில் கிறிஸ்துவைத் தரித்து கொண்டிருக்கிறாயா என்பதை நிச்சயம் செய்த பின்னரே உன் வேலையை ஆரம்பி.
ஜெபம்:
கிருபையுள்ள தேவனே, நீர் என்னுள் வாசம்செய்து, என் கிரியைகளைக் காத்துக்கொள்ளும். அப்பொழுது மற்றவர்கள் என் கிரியைகளில் உம்மைக் காண்பார்கள். ஆமென்.