Site icon Puthuyir

காலைத் தியானம் – மார்ச் 26, 2026

சங்கீதம் 21:1–13

“மகிழ்ச்சியின் ரகசியம்” 

சங்கீதம் 20-ல் தாவீது யுத்தத்திற்குப் புறப்படும்போது தேசமே ஜெபித்தது. இப்போது யுத்தம் முடிந்துவிட்டது; வெற்றி கிடைத்துவிட்டது! சங்கீதம் 21 அந்த வெற்றியின் கொண்டாட்டம். 

பொதுவாக ராஜாக்கள் வெற்றி பெற்றால், “என் வாள் வென்றது, என் படை சாதித்தது” என்று மார்தட்டிக் கொள்வார்கள். ஆனால் தாவீது தன் மகிழ்ச்சியின் ஊற்று அவன் சுயபலம் அல்ல; தேவபலம் என்று அறிக்கை செய்கிறான். தேவன் தாவீதுக்கு அவன் கேட்டதற்கும் மேலாக பொன்னினால் செய்யப்பட்ட முடியைக் கொடுத்தார். இது வெறும் மகுடம் அல்ல; இது தேவன் தந்த அங்கீகாரம். அவன் நீடிய ஆயுளைக் கேட்டான்; தேவன் அவனுக்கு நித்திய ஜீவனையே கொடுத்தார். தேவ சமூகத்தில் நித்தியத்திற்கும் இருக்கக் கிருபை தந்தார். எதிரிகள் அழிக்கப்படலாம், தேசங்கள் வெல்லப்படலாம். ஆனால், ஒரு மனிதனுக்கு உண்மையான மகிழ்ச்சி தேவனுடைய சமுகத்தில் மட்டுமே கிடைக்கும். வெற்றியைக் கண்டு மகிழாதீர்கள்; வெற்றியைத் தந்தவரைக்கண்டு மகிழுங்கள்.

ஜெபம்:

தேவனே, என் வாழ்வின் வெற்றிகள் என் திறமையால் வந்தவை அல்ல, அது உமது ஈவு. துதி, கனம், மகிமை என்றென்றும் உமக்கே உண்டாகட்டும். ஆமென்.

Exit mobile version