காலைத் தியானம் – டிசம்பர் 09, 2022

யோவான் 17: 17 – 26

நான் எங்கே இருக்கிறேனோ,   அங்கே அவர்களும் . .          

                            இயேசுகிறிஸ்து இருக்கும் இடத்தில், அவருக்குச் சொந்தமானவர்களும் இருக்கவேண்டும் என்பது அவருடைய விருப்பம்.  அந்த விருப்பம் நிறைவேறும்படியாக, பிதாவிடம் வேண்டிக் கொள்கிறார். 24 ஆம் வசனத்தை வாசிக்கும் போது, நம் உள்ளத்தில் எத்தனை மகிழ்ச்சி!  இயேசுவோடு அவருடைய மகிமையில் பங்குபெறுவதென்றால் நம் அனைவருக்கும் ஆசைதான். ஆனால் அந்த மகிமையில் பங்கு பெறுவதற்கு முன் அவருடைய அடிமைக் கோலத்திலும் நாம் பங்கு கொள்ளவேண்டும். அவர் குஷ்டரோகியைத் தொட்ட இடத்திலும், சீடர்களின் கால்களைக் கழுவின இடத்திலும்கூட நாம் இருக்கவேண்டும். இயேசு இப்பூமியில் வாழ்ந்து காட்டிய தாழ்மையும் அன்பும் நம்மிடமும் காணப்பட்டால், நாமும் அவர் வீற்றிருக்கும் இடத்தில் இருக்கலாம். (2 தீமோத்தேயு 2:11,12)                                                            

ஜெபம்:

ஆண்டவரே, உம்மோடு சதாகாலமும் இருக்க வேண்டும் என்ற என் ஆசையை நிறைவேற்றும். ஆமென்.