About Us

“புத்துயிர்” 1949ம் ஆண்டு ஜனவரி மாதம்,  திரு. S. தேவ இரக்கம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒவ்வொரு மாதமும் வெளிவரும் ஒரு கிறிஸ்தவ பத்திரிகை.

குறிக்கோள்

சுதந்திர இந்தியாவின் ஆரம்ப நாட்களில் தனிப்பட்ட மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கும், குடும்பங்கள் கிறிஸ்தவ ஒழுக்கங்களைக் கடைப்பிடிப்பதற்கும், திருச்சபையின் முன்னேற்றத்திற்கும் உதவக்கூடிய பத்திரிகைகள் தமிழில் இல்லை என்ற நிலை இருந்தது.  அந்த மிகப் பெரிய தேவையைப் பூர்த்தி செய்வதற்கே புத்துயிர் ஆரம்பிக்கப்பட்டது. இன்று அநேகக் கிறிஸ்தவ பத்திரிகைகள் தமிழில் வந்துவிட்ட போதிலும், புத்துயிர் தன் பணியைத் தொடர்ந்து (72வருடங்களாகச்) செய்து வருகிறது.

திரு S. தேவ இரக்கம் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முள்ளக்காடு என்ற கிராமத்தில் 1897ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி பிறந்தவர்கள். எளிய ஆரம்பத்திலிருந்து ஆண்டவர் அவர்களைப் படிப்பிலும், ஞானத்திலும், வேத அறிவிலும், கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்வதிலும்  அதிகமாக உயர்த்தினார்.  ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமைப் பெற்றவர்கள். முள்ளக்காடு கிராமத்தின் முதல் முதுகலைப் பட்டதாரி அவர்களே!  ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றிய அவர்கள் தமது 51வது வயதில் புத்துயிர் ஊழியத்தை ஆரம்பித்து, 40 ஆண்டுகள் அதைச் சிறப்பாக நடத்திவந்தார். அவரைத் தொடர்ந்து அவருடைய பிள்ளைகள் – Mrs. Hilda Robert புத்துயிர் ஆசிரியராகவும், Mr. D. Asirvatham நிர்வாகப் பொறுப்பாளராகவும் இருந்து புத்துயிர் ஊழியத்தைக் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நடத்தி வந்தார்கள். 2010 முதல் 2015 வரை புத்துயிரின் நிர்வாகத்தை, திரு S. தேவ இரக்கம் அவர்களின் பேரன் Mr. Joseph Robert கவனித்து வந்தார்.

இப்போது புத்துயிர், திரு S. தேவ இரக்கம் அவர்களின் பேரப்பிள்ளைகள் அடங்கிய Puthuyir Trust என்னும் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

Mr. Samuel A. Nirmal: Managing Trustee & Editor
Mrs. Sheila Jayaseelan: Trustee
Mrs. Usha Herbert: Trustee
Mrs. Preethi Chelliah: Trustee
Mr. Christopher Devairakkam: Trustee
Dr. Mrs. Aruna Selwyn: Trustee

காலத்திற்கேற்றபடி புத்துயிர் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் மேற்கொண்டபோதிலும், இன்றும் இவ்வூழியத்தின் குறிக்கோளில் மாற்றம் ஏதுவும் இல்லை.