Site icon Puthuyir

காலைத் தியானம் – மே 04, 2026

திங்கள்                                      செல்வம், அது யாருடையது?

04-05-2026

1 நாளாகமம் 29:1–22

என் பிறந்தநாளில், என் பிள்ளைகள் எனக்குப் பரிசு கொடுப்பதுண்டு. அது என் சம்பாத்தியத்தில்  நான் அவர்களுக்குக் கொடுக்கிற சிறுதொகையை வைத்து அவர்கள் வாங்குகிற பரிசுதான். ஆனாலும், அதை அவர்கள் கபடமில்லாமல் அன்போடு என்னிடம் நீட்டும்போது என் உள்ளம் உருகிப்போய்விடுகிறது. இதே பிஞ்சு மனநிலையில்தான் சக்கரவர்த்தி தாவீது தேவனின் சந்நிதியில் நிற்கிறான்! எருசலேம் தேவாலயத்திற்காகக் குவியும் பொன்னும் பொருளும் மலைப்போல மிளிர்கின்றன. உலகை நடுங்கச் செய்த மாமன்னன், அந்தச் செல்வத்தைப் பார்த்துச் சிறிதும் கர்வம் கொள்ளவில்லை. “உம்முடைய கரத்திலிருந்து வாங்கி உமக்குக் கொடுத்தோம்” என்று மண்டியிடுகிறான். முடிசூடிய சக்கரவர்த்தி, சிருஷ்டிகரின் முன்னே தன்னை வெறும் யாசகனாகவே காண்கிறான். தன் கையில் உள்ள பொக்கிஷமெல்லாம் இரவல் சொத்து என்ற மெய்ஞானம் அவனை ஆட்கொண்டிருந்தது. உன் திறமையும் செல்வமும் உன்னுடையது என்று ஒருபோதும் மார்தட்டாதே; அவை எல்லாம் கர்த்தர் உன் கரங்களில் திணித்த இரவலே!

ஜெபம்: சர்வவல்லவரே, என்னிடம் உள்ள யாவும் நீரே தந்த ஈவு. உமது கரத்தில் இருந்து நான் பெற்றுக்கொண்டதை, உமது மகிமைக்காகவே உபயோகிக்கக் கற்றுத் தாரும். ஆமென். 

Exit mobile version