செவ்வாய் சத்தமில்லாத பிரம்மாண்டம்!
19-05-2026
1 இராஜாக்கள் 6:1–14
எருசலேமின் மோரியா மலையில் பல ஆண்டுகளாகக் கனவு காணப்பட்ட தேவனுடைய ஆலயம், இதோ சாலொமோனின் கரங்களால் உருப்பெறுகிறது. இந்த மாபெரும் கட்டுமானத்தில் ஒரு ஆச்சரியமான ரகசியம் ஒளிந்திருக்கிறது: சுத்தியல், கோடாரி முதலான எந்த இரும்பு ஆயுதத்தின் சத்தமும் கேட்கப்படவே இல்லை (வசனம் 7). பொதுவாக, உலகத்தின் ஒரு மாளிகை எழும்பும்போது உளிச் சத்தமும் சம்மட்டியின் இரைச்சலும் திசைகளை அதிரவைக்கும். ஆனால், சர்வவல்லவரின் சிம்மாசனமோ, மனிதப் பிரயத்தனத்தின் எந்த ஆரவாரமுமின்றி, அமைதியின் மடியில் கம்பீரமாகச் செதுக்கப்படுகிறது! இதுவே ஆவிக்குரிய இரகசியம்: தேவன் உன்னைத் தமது மகிமையின் ஆலயமாகக் கட்டும்போது, அது உன் மாம்சத்தின் இரைச்சலிலோ சுய வியர்வையிலோ நடப்பதில்லை. கல்வாரியின் கிருபையில் நீ இளைப்பாறும்போது, ஆவியானவர் சத்தமின்றி உன்னைச் செதுக்குகிறார்!
ஜெபம்: கர்த்தாவே, உமது சித்தத்திற்கு என்னை ஒப்புக் கொடுக்கிறேன். உமக்குப் பிரியமான பாத்திரமாக என்னை வனைந்தருளும் . ஆமென்.