காலைத் தியானம் – ஜூலை 13, 2020

2 இராஜா 20: 1 – 6   

நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும்

உன் வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத்து என்பது கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் இன்று கொடுக்கும் அறிவுரை. மனிதராகிய நாம், இந்த பூலோக வாழ்க்கையைவிட்டுச் செல்லும் நாள் ஒன்று உண்டு. அது எப்போது என்பது நமக்குத் தெரியாது. நம்முடைய கலாச்சாரத்தில் ஒருவர் மரிக்கும் வரை நாம் மரணத்தைக் குறித்துப் பேசுவதில்லை. நாம் பலவீனமான மனிதர் என்பதை உணர்ந்துகொள்வதில் தவறு இல்லை. இன்று, எதையும் சாதித்துவிடுவேன் என்று நம்மை நினைக்க வைக்கும் உடல்நிலை இருந்தாலும், அந்நிலை ஒரே நாளில் மாறக் கூடும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் அதை நன்றாக நடத்தவேண்டியதின் அவசியத்தையும் 1 தீமோத்தேயு 3: 4, 5ம் வசனங்களில் பார்க்கிறோம்.  நீ ஒழுங்குபடுத்த வேண்டிய குடும்பக்காரியம் என்ன? அது பணம் அல்லது பொருள் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்.  கர்த்தர் உனக்கென்று கொடுத்திருக்கும் குடும்பம் மற்றும் உறவினர்களோடு உள்ள உறவு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். அல்லது கர்த்தருக்கென்று நீ செய்யும் ஊழியம் சம்பந்தப்பட்டதாகக் கூட இருக்கலாம். காலதாமதம் செய்யாதே.    

ஜெபம்

ஆண்டவரே, என் குடும்பக் காரியங்களை ஒழுங்குபடுத்தத் தேவையான ஞானத்தையும் மனத்தாழ்மையையும் எனக்குத் தாரும். ஆமென்.