காலைத் தியானம் – ஆகஸ்ட் 20, 2020

எஸ்றா 7: 7 – 10

தன் தேவனுடைய தயவுள்ள கரம் தன் மேலிருந்ததினால் எருசலேமுக்கு வந்தான்

எஸ்றா தேவனுடைய மனிதன். அவன் வேதத்தை ஆராயவும், அதன்படி நடக்கவும், வேதத்தை மற்றவர்களுக்குப் போதிக்கவும், தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டான் என்று வேதாகமம் சொல்லுகிறது. பாபிலோனிலிருந்து எருசலேம் செல்ல நான்கு மாதங்களாயின. அது 900 மைல்கள் தூரமுள்ள, ஆபத்துக்கள் நிறைந்த கடினமான பயணமாயிருந்தது. அந்த பிரயாணத்தை வெற்றிகரமாக முடித்ததற்கு எஸ்றாவின் நற்குணங்களோ அல்லது தேவபக்தியோ காரணமாகச் சொல்லப்படவில்லை. அவனுடைய தேவனின் தயவுள்ள கரம் அவன் மேலிருந்தபடியால் அவன் எருசலேம் வந்து சேர்ந்தான் என்று பார்க்கிறோம். உன் வாழ்க்கையில் பல விதமான வெற்றிகளைக் காணும்போது அதற்குக் காரணம் உன் உழைப்பு அல்லது திறமை என்று நினைக்கிறாயோ? உழைப்பும் திறமையும் இருக்கும் அனைவருக்கும் வெற்றி கிடைப்பதில்லை. தேவனுடைய தயவு நமக்கு அவசியம். எல்லா வெற்றிகளுக்கும் அதுதான் காரணம்.

ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய தயவுள்ள கரம் எப்போதும் என்னோடிருப்பதாக. ஆமென்.