காலைத் தியானம் – ஜூன் 23, 2022

லூக்கா 3: 23 – 38

அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவர் ஆனார்

                      இந்த உலகத்தை இரட்சிக்க வந்தவர் 30 வயது வரை நாசரேத்தூரில் ஒரு தச்சனாக வேலை பார்த்து வந்தார். பிறப்பிலேயே தேவனுடைய குமாரன் என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், இயேசு தமது முப்பதாம் வயதுவரை பிதாவின் வேளைக்காகப் பொறுமையுடன் காத்திருந்தார். அவசரப்பட்டு ஊழியத்தில் குதிக்கவில்லை. மேலும் யூத கலாச்சாரத்தில் முக்கிய பொறுப்புகளை ஏற்பதற்கு 30 வயது சரியான பருவமாகக் கருதப்பட்டது. ஆசரிப்புக் கூடாரத்திலே வேலை செய்ய 30 வயதில்தான் சேரமுடியும் (எண்ணாகமம் 4:3). யோசேப்பு பார்வோன் ராஜாவுக்கு சேவை செய்ய ஆரம்பிக்கும்போது அவனுடைய வயது 30 (ஆதியாகமம் 41: 46). தாவீது ராஜாவாகும்போது அவனுடைய வயது 30 (2 சாமுவேல் 5:4).  நாமும் கர்த்தருடைய வேளைக்காகக் காத்திருக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஜெபம்:

ஆண்டவரே, உமது வேளைக்காகக் காத்திருக்க என்னைப் பக்குவப்படுத்தியருளும். ஆமென்.