காலைத் தியானம் – மே 22, 2020

2 இராஜா 4: 8 – 10   

நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் 

எலிசாவின் ஊர் ஆபேல்மேகொலா (1 இராஜா 19: 16). கர்மேல் பர்வதம் எலியாவின் ஊழியத்தில் ஒரு முக்கிய இடமாக இருந்தது. எலிசாவும் அங்கு அடிக்கடி போய்வந்தார். அங்கு தீர்க்கதரிசிகளின் பயிற்சி கூடம் ஒன்று இருந்திருக்கவேண்டும் என்று நம்பப்படுகிறது. ஆபேல்மேகொலாவிலிருந்து கர்மேல் பர்வதம் செல்லும்போது கிட்டத்தட்ட பாதி வழியில் சூனேம் என்ற ஊர் இருந்தது. இன்று வாசித்தப் பகுதியில், பெயர் சொல்லப்படாமல் குறிக்கப்பட்டிருக்கும் பெண் வசதியுள்ளவள். சமூகத்தில் கனம்பெற்றவள். அவள் தானாகவே எலிசாவை வரவேற்று, உபசரித்து அவனுக்குத் தங்கி இளைப்பாற வசதி செய்துகொடுத்தது கர்த்தரின் பார்வையில் ஒரு சிறந்த ஊழியம். இன்றைய நாட்களில் பயணம் செய்யும் ஊழியர்களை உபசரித்து, தங்களோடு தங்க வைத்து, அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய அநேகர் முன் வருவதில்லை. வேண்டுமானால் பணம் கொடுத்துவிடுகிறேன்.  Hotelகளில் தங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லுகிற மனப்பான்மையே நம்மிடம் இருக்கிறது. ஊழியர்களை உபசரிப்பது உனக்கும் அந்த ஊழியருக்கும் ஆசீர்வாதமாக இருக்கும்.       

ஜெபம்

ஆண்டவரே, உமது ஊழியர்களை மகிழ்ச்சியுடன் உபசரிக்கும் மனதை எனக்குத் தாரும். ஆமென்.