காலைத் தியானம் – பிப்ரவரி 03, 2021

கலா 1: 18 – 24                                                       

என்னைப் பற்றி தேவனை மகிமைப் படுத்தினார்கள்                      

ஊழியத்திற்காக அழைக்கப்பட்டுள்ள அநேகர், கிறிஸ்தவர்கள் மத்தியிலே “ஊழியம்” செய்வதைத்தானே விரும்புகிறோம்! அதிலேதான் பாதுகாப்பும் சொகுசும் இருக்கிறதோ? அப்படிப்பட்ட ஊழியத்தில் பணக்கஷ்டம் இல்லை என்று நினைக்கிறோமோ? உன்னை அழைத்தவரை நோக்கிப் பார். அவர் காட்டும் இடத்திற்குப் போ. அவர் சொல்லும் வேலையைச் செய்.   அப்பொழுது உன்னைக் காணாத விசுவாசிகளும் உன்னைக் குறித்து தேவனை மகிமைப்படுத்துவார்கள்.  பவுல் கர்த்தர் காட்டிய ஊழியத்தைச் செய்தார். கர்த்தர் போ என்று சொன்ன இடங்களுக்கெல்லாம் சென்று கொண்டேயிருந்தார். தனக்கு நல்லது என்று தோன்றிய போதிலும், கர்த்தர் போகாதே என்று சொன்ன இடத்திற்கு அவர் போகவில்லை. இது கர்த்தர் கொடுத்த ஊழியம் என்று ஒரே இடத்தில் இருந்துவிடவில்லை.  அவர் காட்டிய இடங்களுக்கு அவர் சொன்ன நேரத்தில் போய்க்கொண்டேயிருந்தார். உன்னிடமும் அப்படிப்பட்ட கீழ்ப்படிதல் உண்டா?          

ஜெபம்

ஆண்டவரே, என்னுடைய வசதிக்காக அல்ல, உம்முடைய நாமம் மகிமைப் படுவதற்காகவே என்னை உபயோகித்தருளும். ஆமென்.