காலைத் தியானம் – பிப்ரவரி 22, 2021

எபே 4: 1 – 10                                                                                             

நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பு               

உன் அழைப்பு எதுவாக இருந்தாலும் அதற்குப் பாத்திரவானாய் நீ நடக்க வேண்டும். ஊழியம் செய்ய அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் மேடைப் போட்டு, கூட்டத்தைக் கூட்டி, பிரசங்கம் செய்யவேண்டும் என்று நினைக்கக் கூடாது. கர்த்தர் நம்மில் இரண்டு பேரைக்கூட ஒன்றுபோல உண்டாக்கவில்லை.  நாம் ஒவ்வொருவரும் இரட்சிப்பைத் தெரிந்து கொண்ட அனுபவங்கள் கூட பலவிதம்.  அதே போல நமக்குக் கொடுக்கப்படும் ஊழியங்களும் பலவிதம். நீ சந்திக்கும் எல்லாரோடும் தனிப்பட்ட முறையில் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதுதான் உன் அழைப்பு என்றால், அதை உண்மையுடனும் உத்தமத்துடனும் செய். கர்த்தர் உன்னை எங்கே வைத்திருக்கிறாரோ, அங்கே நீ என்ன செய்ய வேண்டுமோ அதைக் கிறிஸ்து உனக்குக் கொடுத்திருக்கும் ஊழியம் என்ற உணர்வோடு செய்.

ஜெபம்

ஆண்டவரே, நீர் எனக்குக் கொடுத்துள்ள ஊழியத்தை உண்மையுடனும் உத்தமத்துடனும் செய்ய உதவிபுரியும். ஆமென்.