காலைத் தியானம் – செப்டம்பர் 08, 2021

சங் 12: 1 – 18             

உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள்

                            சங்கீதங்கள் அனைத்துமே அதை எழுதியவர்களின் அனுபவ அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. இந்த 12ம் சங்கீதத்தில், உண்மையுள்ளவர்களைக் காண்பதே அரிதாயிருக்கிறதே என்று தாவீது ராஜா அங்கலாய்க்கிறார். அநேக நூற்றாண்டுகளுக்குப் பின்னும் அந்த நிலை மாறவில்லையல்லவா? மனிதர்கள் சொல்வதைச் செய்யாவிட்டால் அது உண்மையற்ற நிலைதானே! இவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று எத்தனை பேர் பேசுவதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடிகிறது. பிறருக்கு படம் காட்டுவதற்காக பேசுவதோ அல்லது செயல்படுவதோ உண்மையற்ற நிலைதானே! ஆலயத்திற்கு ஒழுங்காகப் போகும் மக்கள் கூட்டத்தில்கூட உண்மையுள்ளவர்கள் அநேகர் இல்லையே! இன்றும் உண்மையற்ற அநேகர் மத்தியில் உண்மையுள்ளவர்கள் ஒரு சிலராக இருக்கிறார்கள். நீ எந்த கூட்டத்தைச் சார்ந்தவன்(ள்)?  உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே என்று ஆண்டவரால் அழைக்கப்படும் சிறுபான்மையினரைச் சேர்ந்தவனா(ளா) அல்லது மிகப் பெரிய கூட்டமான உண்மையற்றவர்களோடு சேர்ந்தவனா(ளா)?

ஜெபம்:

ஆண்டவரே, மனிதருக்கு முன்னும் உம்முடைய கண்களிலும் உண்மையுள்ளவனாகவே எப்பொழுதும் காணப்பட எனக்கு உதவிசெய்யும். ஆமென்.