காலைத் தியானம் – மார்ச் 31, 2022

மத் 28: 11 – 20

உலகத்தின் முடிவு பரியந்தம், சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்

                             இயேசு கிறிஸ்து, நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்று சொன்னதை நாம் அனுபவத்தில் பார்க்கிறோம். அன்று இயேசு சொன்னபோது அது ஒரு வாக்குத்தத்தம். இன்று அது வாக்குத்தத்தம் அல்ல, நடைமுறை அனுபவம். இயேசுகிறிஸ்து மரித்து உயிர்த்தெழாமல் பூமியில் மனித உருவிலேயே வாழ்ந்திருந்தால், அவர் பூமியின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் நம் அனைவருடனும் எப்பொழுதும் இருக்கமுடியாது. உயிர்த்தெழுந்த இயேசுவால் அது சாத்தியமாகி விட்டது. இயேசு நம்மோடு இருப்பதால் நாம் எதற்கும், எவருக்கும் பயப்படவேண்டியதில்லை. நாம் அவருக்கு மாத்திரம் கீழ்ப்படிந்து அவரை மகிழ்விக்கும் வண்ணம் வாழ்வோமாக. உலகத்தின் முடிவு பரியந்தம் என்னும் வார்த்தைகள், வரலாறு முழுவதையும் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கர்த்தரிடம் ஒரு தெளிவான திட்டம் இருக்கிறது என்பதை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. Our Lord has a plan. He is the Lord of History. It will all come to a climax one day.

ஜெபம்:

ஆண்டவரே, அனுதினமும் நான் அனுபவிக்கும் உம்முடைய பிரசன்னத்துக்காகவும், வழி நடத்துதலுக்காகவும் நன்றி சுவாமி. ஆமென்.