காலைத் தியானம் – மார்ச் 03, 2022

மத் 21: 1 – 12

சந்தைவெளிகளில், வந்தனங்களையும் . .  ரபீ, ரபீ, என்றழைக்கப்படுவதையும்  விரும்புகிறார்கள்

                              சில வருடங்களுக்கு முன் ராமக்கிருஷ்ணா மடத்திலுள்ள ஒரு தலைவரைப் பற்றி கேள்விப்பட்டேன். அந்த தலைவர் தன்னுடைய மருத்துவ தொழிலை விட்டுவிட்டு மடத்தில் சேவை செய்ய தன்னை அர்ப்பணித்து விட்ட மருத்துவர். அவரை என் நண்பர் ஒருவர், தன்னுடைய மேற்பார்வையில் உள்ள மருத்துவமனையில் ஒரு பயிற்சி கொடுப்பதற்காக அழைத்திருந்தார். அதற்கு சம்மதம் தெரிவித்த மடத்தின் தலைவர் கூறியிருந்த நிபந்தனைகளைக் கேட்டு அசந்து போய்விட்டேன். யாரும் அந்த தலைவரை வரவேற்க போகக்கூடாது; மாலையிட்டு மரியாதை செய்யக் கூடாது; வெகுமதி எதுவும் கொடுக்கக் கூடாது; அவருக்காக நன்றியுரை (vote of thanks) கூட சொல்லக்கூடாது!  நாம் எங்கே இருக்கிறோம்? பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், திருச்சபைகள் போன்றவைகளில் எதில் தலைமைப் பொறுப்பு வகித்தாலும் நம்முடைய நிலை எப்படி இருக்கிறது? நாம் எப்படிப்பட்ட மரியாதைகளை எதிர்பார்க்கிறோம்? நம் உள்ளத்தை அறிந்த இயேசு கிறிஸ்து நம்மைக் குறித்து என்ன சொல்லுவார்?

ஜெபம்:

ஆண்டவரே, தாழ்மையோடு சேவை செய்யும் தலைவனாக என்னை மாற்றியருளும். ஆமென்.