காலைத் தியானம் – மே 19, 2022

மாற்கு 12: 1 – 12

தன் பாகத்தை வாங்கிக்கொண்டு வரும்படி ஊழியக்காரனை அனுப்பினான்

                           உன் வேலையில் நீ பெறும் சம்பளம், உன்னுடைய செல்வம், சொத்து அனைத்தும் கர்த்தர் உனக்குக் கொடுத்தவைகள்.  உன் ஜீவன், சுகம், பெலன், திறமைகள் எல்லாம் அவர் கொடுத்தவைகளே. ஆண்டவர் எல்லாவற்றையும் உனக்கு குத்தகைக்குக் கொடுத்திருக்கிறார். குத்தகைக்குப் பெற்றிருப்பதால் எல்லாவற்றிற்கும் சொந்தக்காரர் நீயல்ல, ஆண்டவர்தான். ஆண்டவருடைய சொத்தில் ஒரு சிறு பாகத்தை அவருக்குக் கொடுப்பதில் உனக்கு விருப்பமில்லையோ? ஆண்டவருக்குக் கொடுக்க வேண்டியதை அவருக்குக் கொடுக்கிறாயா? தேவனுடைய ஆலயத்திற்கும்,  ஊழியர்களுக்கும் கொடுப்பதில் குறை வைக்காதே.

ஜெபம்:

ஆண்டவரே, நீர் என்னை ஆசிர்வதிக்க வேண்டும் என்பதற்காக நான் கொடுக்கவில்லை. நீர் எனக்குக் கொடுத்துள்ள அநேக ஆசீர்வாதங்களை நன்றியோடு நினைவுகூர்ந்து அதில் ஒரு பகுதியை மாத்திரம் உமக்குத் திரும்பத் தருகிறேன். ஏற்றுக் கொள்ளும். அங்கீகரியும். ஆமென்.