காலைத் தியானம் – ஏப்ரல் 08, 2021

1 தெச  4: 1 – 8       

தேவன் பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்

நியாயப்பிரமாணங்கள் நம்மை இரட்சிக்கவில்லை. நியாயப்பிரமாணங்கள் ஒருவரையும் நீதிமானாக்குவதில்லை என்பது உண்மைதான். எப்படிப்பட்ட நிலையை அடைந்துவிட்டால் நாம் நீதிமான்களாக இருப்போம் என்பதைத்தான் நியாயப்பிரமாணங்கள் நம் முன் வைக்கின்றன. இரட்சிப்பு என்பது பாவத்தின் பிடியிலிருந்து மீட்கப்படுவதைக் குறிக்கின்றது. இயேசு கிறிஸ்து  பாவிகளை இரட்சிக்க தயாராகவும் விருப்பமுள்ளவராகவும் இருக்கிறார். ஆகையால் பாவம் செய்வதை அவர் அனுமதிக்கிறார் என்று எண்ணிவிடக்கூடாது. நாம் பாவம் செய்யும்போது அவரை அதிகமாய் வேதனைப் படுத்துகிறோம். அவரைவிட்டு நம்மை நாமே பிரித்து வெகுதூரத்திற்குக் கொண்டுபோய்விடுகிறோம். கர்த்தர் பரிசுத்தர். நாமும் பரிசுத்தமாக இருக்கும்படிதான் கர்த்தர் நம்மை அழைக்கிறார்.                                                     

ஜெபம்

ஆண்டவரே, என்னை உம் அருகில் வைத்து அணைத்துக் கொள்ளும். அப்பொழுது பரிசுத்தமாகவே இருப்பேன். ஆமென்.