காலைத் தியானம் – ஜூன் 27, 2021

ஆபகூக் 2: 1 – 4          

அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு . . . அது தாமதிப்பதில்லை                            

இது ஒன்றுக்கொன்று முரணான வாக்கியமாகத் தோன்றினாலும், உண்மையில் இதில் முரண்பாடு எதுவுமில்லை. நமக்குத் தாமதமாகத் தோன்றினாலும் நாம் கர்த்தருடைய வேளைக்காகக் காத்திருக்கவேண்டும். கர்த்தர் குறித்து வைத்துள்ள நேரத்தில் அவருடைய திட்டங்கள் நடந்தே தீரும். தாமதம் இருக்காது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கர்த்தருடைய வேளைக்காகக் காத்திருப்பது நமக்கு மிகப்பெரிய சவால். லாசரு சுகமில்லாமல் இருக்கும்போது, அவன் மரிப்பதற்குமுன் இயேசு அவன் வீட்டிற்கு வந்து சேரவில்லை. லாசருவின் சகோதரிகளின் பார்வையில் அவர் சில நாட்கள் தாமதித்து வந்தார். இயேசுவோ, பிதாவாகிய தேவனின் திட்டப்படி அவருடைய மகிமை விளங்கும்படி சரியான நேரத்திற்கு வந்து லாசருவை உயிரோடு எழுப்பினார். கர்த்தருடைய நேரத்தில் அவருடைய சித்தம் நிறைவேறும் என்பதை விசுவாசித்து காத்திருக்கிறவன் கர்த்தருடைய மகிமையைக் காண்பான். ஒருவேளை நீ கடினமான பாதையைக் கடந்து சென்றுகொண்டிருந்தால், கர்த்தருடைய இந்த வார்த்தையைப் பிடித்துக் கொள்.                                                                                                                     

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய வேளைக்காகக் காத்திருக்கும் பொறுமையையும் விசுவாசத்தையும் எனக்குத் தாரும். ஆமென்.