காலைத் தியானம் – ஜூலை 22, 2020

2 இராஜா 22: 14 – 20         

உங்களை என்னிடத்தில் அனுப்பினவரிடத்தில் நீங்கள் போய்

கர்த்தருடைய வார்த்தை யோசியாவுக்கு உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவள் மூலமாக இரண்டு விதமாகக் கொடுக்கப்படுகிறது. முதலாவதாகக் கொடுக்கப்படும் கர்த்தருடைய முடிவு, யூதாவின் மக்களில் ஒருவனான யோசியாவுக்குக் கொடுக்கப்படுகிறது (வசனம் 15-17). கர்த்தருடைய பொல்லாப்பு நிச்சயமாக யூதாவின் மக்கள்மீது வரும் என்பதே அந்த முடிவு. இரண்டாவது முடிவு, யூதாவின் ராஜாவகிய யோசியா என்னும் தனிப்பட்ட மனிதனுக்குக் கொடுக்கப் படுகிறது (வசனம் 18-20). நீ உன்னைத் தாழ்த்தி, அழுது, ஜெபித்தபடியால் உன் ஜெபத்தைக் கேட்டேன்; யூதாவுக்கு வரும் பொல்லாப்பை நீ காணாதபடி உன்னை அதற்கு முன்னதாகவே நான் எடுத்துக்கொள்வேன் என்று கர்த்தர் சொன்னார்.  நாம் நம் நாட்டு மக்களுக்காக ஜெபிக்கவேண்டும். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையின்  பரிசுத்தத்துக்காகவும் ஜெபிக்கவேண்டும். God will respond to our sincere prayer.                

ஜெபம்

ஆண்டவஆண்டவரே, என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் வார்த்தைகளை நீர் கேட்டு பதிலளிப்பதற்காக நன்றி சுவாமி. ஆமென்.